நெல்லை சீமை.....

நெல்லை சீமை.....

Thursday, February 4, 2010

பொன் மொழி ‍& பழமொழிகள் . .

01. ஒருவன் வாழ்ந்த வாழ்க்கையின் சிறப்பு அவனுடைய மரணத்தின்போதுதான் தீர்மானமாகிறது.

02. இயற்கை என்னும் தாய் மார்பில் பால் குடிக்கும் தன் குழந்தையை ஒரு மார்பில் இருந்து இன்னொரு மார்பிற்கு மாற்றும் போது ஏற்படும் இடைவெளியே மரணம்.

03. வாழ்வைத் தள்ளினாலும் சாவைத் தள்ளக் கூடாது.

04. மனிதர்கள் இறந்த பின்னர்தான் அவர்களைப் பற்றி மதிப்பீடு செய்கிறோம்.

05. பிறப்போடு பிறந்தது மரணம்.

06. மரணம் என்பதும் வாழ்வு என்பதும் இரண்டு வேறு வேறான சங்கதிகள் அல்ல வாழ்க்கையை அனுபவிப்பதென்பது மரணத்தை அனுபவிப்பதுதான்.

07. செத்தவன் வாயில் மண் இருந்தவன் வாயில் சோறு.

08. கெட்ட செய்திகள் போல வேறு எதுவுமே வேகமாகப் பரவுவதில்லை.

09. காத்துக் கொண்டிருக்காதே நீ ஒருபோதும் செயற்படமாட்டாய்.

10. குனியாதே சுமப்பாய் நிமிர்ந்தால் உயர்வாய்.

11. நன்றி மறவாத வாழ்வு நம்மை அறியாமலே உயரும்.

12. வார்த்தைகள் அசிங்கமானால் வாழ்வும் அசிங்கமாகும்.

13. ஆழமான அறிவே அழகான வாழ்வை அமைக்கும்.

14. புத்தகம் இல்லாத வீடு சன்னல் இல்லாத இருட்டறை போன்றது.

15. துன்பத்தை மறந்தாலும் அது புகட்டிய பாடத்தை மறக்காதே.

16. ஓர்மம் ஒப்பற்ற சாதனைகளை உருவாக்கும்.

17. உருப்படியான வேலைக்கே உலகம் உன்னை அழைத்திருக்கிறது மறந்துவிடாதே.

18. அரிய சந்தர்ப்பங்கள் தேடி வரும்போது அதைப் பயன்படுத்தத் தவறாதே

19. உங்கள் நேரம் உங்களுக்குத் தெரியாமல் எடுக்கப்படுவதை உணருங்கள்.

20. ஆழமான அர்த்தங்களும் அதிகமான தத்துவங்களும் அடங்கியதே வாழ்க்கை.

21. மற்றவர்களின் குறைகளைப் பற்றி மட்டுமே ஆராய்ந்து கொண்டிருக்காதே. அவர்களின் நல்ல குணங்கள் உனக்கு தெரியாமலே போய் விடும்.

22. உன் கண்களில் கருனையையும், உன் வார்த்தையில் அன்பையும் காட்டு, பகையாளியும் உன்வசமாவான்.

23. நான் என்ற அகந்தையை விடு. நான் எல்லாம் தெரிந்தவன் என்று மற்றவர்களை குறைவாக மதிப்பிடாதே. அந்த மமதை உன்னை அளித்து விடும்.

24. எல்லோரையும் பாராட்டும் மனப்பான்மையை வளர்த்துக் கொள். தன்மானத்தை என்றும் விடாதே

25. பொறுமைக்கு என்றும் அழிவில்லை. பொறாமை குணத்தை விட்டொழி.
- அன்னைதெரசா


மகிழ்ச்சி குறித்த பொன்மொழிகள்:

"மகிழ்ச்சிக்கு வெற்றி திறவுகோலல்ல. மகிழ்ச்சியே வெற்றிக்குத் திறவுகோல். நீ செய்வதை நீ நேசித்தாயானால், நீ வெற்றியடைவாய்."

- Albert Schweitzer


"உங்கள் விதி என்னவாயிருக்கும் என்று நானறியேன், ஆனால் ஒன்று நானறிவேன்: உங்களில் யார் சேவை செய்வது எப்படி என்று விழைந்து கண்டுபிடித்துள்ளீர்களோ, அவர்கள் தான் உண்மையில் மகிழ்ச்சியடைவீர்கள்."

- Albert Schweitzer

"மகிழ்ச்சி என்பது நல்ல ஆரோக்கியமும் குறைந்த ஞாபக சக்தியையும்விட வேறொன்றுமில்லை."

- Albert Schweitzer

"செய்வதற்குச் சில, நேசிப்பதற்குச் சில, மற்றும் எதிர்பார்ப்பதற்குச் சில, இவைகளே மகிழ்ச்சியின் உன்னத அத்தியாவசியத் தேவைகள்."

- Allan K. Chalmers

"மகிழ்ச்சி: இதை நாம் அபூர்வமாக உணர்கிறோம். நான் அதை விலைக்கு வங்குவேன், யாசிப்பேன், திருடுவேன்,இரத்தம் சொட்டும் நாணயங்களால் விலை கொடுப்பேன் இந்த எல்லையற்ற நன்மைக்காக."

- Amy Lowell


"நாமனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் குறிக்கோளுடன் வாழ்கிறோம்; நம் வாழ்க்கைகள் எல்லாம் வேறுபட்டவை, இருப்பினும் ஒன்றே."

- Anne Frank

"மகிழ்ச்சி தன்நிறைவு பெற்றவருக்கு உரியது."

- Aristotle

"செயல்கள் எப்போதும் மகிழ்ச்சியைக் கொண்டு வருவதில்லை, ஆனால் செயலில்லாமல் மகிழ்ச்சியில்லை."

- Benjamin Disraeli


"நமது மனோபலத்தின் பரிபூரண உபயோகிப்பும் நாம் வாழும் உலகைப் பரிபூரணமாய் உணர்வதும்உண்மையிலேயே திருப்திதரும் மகிழ்ச்சியை அளிக்கின்றன."

- Bertrand Russell

உன்னுடைய உழைப்பும் சொற்களும் உனக்கும் பிறர்க்கும் பயனுள்ளனவாயிருக்கையில் மகிழ்ச்சி வருகிறது.

- Buddha

உங்களை நீங்கள் மதியுங்கள்

மற்றவர்கள் மதிக்க:

நம்மை நாம் எப்படி வெளிப்படுத்துகிறோமோ அப்படித்தான் உலகம் நம்மை அறிந்து கொள்கிறது. என்வே,
உலகம் உங்களை மதிக்கும் விதமாக உங்களை நீங்கள் வெளிப்படுத்துங்கள்...

யோசித்த பின் செயல்படுங்கள்:

எந்த வேலையைச் செய்வதற்கு முன்பும், நன்கு யோசித்துவிட்டுத் தொடங்குங்கள். அது தேவையா என்று சிந்தியுங்கள். தேவையில்லை என்றால் தவிர்த்து விடுங்கள்

முகமலர்ச்சி:

பிளாஸ்டிக் பூக்களைப் போல் செயற்கையாய்ச் சிரிக்காமல் இன்று பூத்த மலர் போல் இயல்பான புன்னகையும் இதமான சொற்களும் உங்களள மேலுள்ள நல்லெண்ணத்தைப் பலமடங்கு பெருகச் செய்யும்.

உங்களை நீங்கள் மதியுங்கள். உலகம் நிச்சயாம் மதிக்கும்

ஃபாயிஷாகாதர்



தோட்டத்து பூக்களைபோல் புன்னகை வீசிடுங்கள், வாட்டத்தை போக்குகின்ற வார்த்தையை பேசிடுங்கள்

-கவிஞர் வைரமுத்து

அன்னை தெரசா

அமைதியின் பலன் பிரார்த்தனை
பிரார்த்தனையின் பலன் நம்பிக்கை
நம்பிக்கையின் பலன் அன்பு
அன்பின் பலன் சேவை
சேவையின் பலன் அமைதி.

நாம் எவ்வளவு சேவை செய்கிறோம் என்பதை விட, செய்யும் சேவையை அன்புடன் செய்வதே முக்கியம்.
நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்பதை விட, கொடுப்பதை அன்புடன் கொடுப்பதே முக்கியம்.


டாக்டர். அப்துல் கலாம்

கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல...
உன்னை தூங்கவிடாமல் பண்ணுவது எதுவோ அதுவே இலட்சியக் கனவு..
ஆம்! ! கனவு காணுங்கள்!


ஸ்ரீ அன்னை



வாழ்க்கைக்கு ஓர் உயர்ந்த லட்சியம் இருக்க வேண்டும்.
உனது லட்சியம் எவ்வளவு உயர்வாக உள்ளதோ,
அவ்வளவு உயர்வாக அமையும் உனது வாழ்வு.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒன்றைக் கற்றுக்கொள்வதற்க்கும்
முன்னேறுவதற்கும் வாய்ப்பிருக்கும்.

பின்னோக்கிப் பார்க்காதே.எப்போதும் முன்னோக்கி நீ எதைச் செய்ய
விரும்புகிறாயோ, அதையே பார். நீ முன்னேறுவது உறுதி
-விவேகானந்தர்

கடவுளை மற ! மனிதனை நினை !
-தந்தை பெரியார்-


எல்லா நல்ல மனிதர்களும் உலகத்திற்கு தகுந்தபடி தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். ஒருசில முரன்பட்ட மனிதர்கள் மட்டுமே, தங்களுக்கு ஏற்றபடி உலகத்தை மாற்றியமைப்பதில் சளைக்காமல் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். உலகத்தின் எல்லாவித முன்னேற்றங்களும் இப்படிப்பட்ட முரன்பட்ட நபர்களையும், அவர்களின் புதுமைக் கண்ணோட்டத்தையும்தான் நம்பி இருக்கின்றன.

-பெர்னாட்ஷா-

எங்கள் ஊர்...

இன்னும் எங்கள்
ஊர் கொஞ்சம்
பத்திரமாகத் தான்
இருக்கிறது

காலையில் ஒரு
குயில் எங்கிருந்தோ
கூவுகிறது

என் வீட்டு
நந்தியாவட்டையிலும்
பவளமல்லி மரத்திலும்
சிட்டுக் குருவிகள்
கொஞ்சிக் கொண்டிருக்கின்றன

அதிகாலை பால் மணிச்சத்தம்
கேட்டுக் கொண்டுதான்இருக்கின்றது

புதிய மனிதர்களையும்
போலீஸ்காரர்களையும்
பார்த்துத் தெரு நாய்கள்
குலைத்துக் கொண்டுதான்
இருக்கின்றன

ஒற்றை ஆட்டுக் கிடா
பத்துப் பெண் ஆடுகளைத்
துரத்திக் கொண்டுதான்
இருக்கிறது

தெருப் பெண்களுக்கு
அருள் பாலிப்பதற்கென்றே
பசுக்கள் காலையிலேயே
தெருவிற்கு வந்து விடுகின்றன

பாலாக்கீரை அரைக்கீரை
பொன்னாங்கண்ணிக்கீரை
பாட்டிகளின் குரல் கேட்டுக்
கொண்டுதான் இருக்கின்றது

கரிசக்குளம் கீரைத்தண்டு
கணபதி விற்றுக்
கொண்டுதான் இருக்கிறார்

ஆனையும் திருமஞ்சனக்
குடமும் அம்பாளுக்குப்
போய்க் கொண்டு
தானிருக்கிறது

செண்பகப் பூ விற்ற
தாத்தாவுக்கு வாரிசுகள்
இல்லை போல

நயினார் குளத்திற்கு
வெளி நாட்டுப்
பறவைகள் வந்து
கொண்டு தானிருக்கின்றன

அதிகச் சிலைகள்
இல்லாததனால்
எங்கள் ஊர் கொஞ்சம்
அழகாகத் தான் இருக்கிறது

-- நெல்லை கண்ணன்